[X] Close

தொழில் தொடங்க பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக நகைக்கடை உரிமையாளர் மீது புகார்

தமிழ்நாடு

Complain-against-a-jewelry-store-owner-for-fraudulently-obtaining-money-to-start-a-business

மேலூரில் தொழில் தொடங்க பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சிராயன்பட்டி பகுதியில் தொழில் தொடங்குவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் முருகானந்தம் என்ற அந்த நபர் நகை மற்றும் அடகு கடை நடத்தி வந்ததாகவும், தொழில் தொடங்க உதவுமாறு பலரிடம் பணம் வசூலித்ததாகவும் தெரிகிறது. பணம் குறித்து கேட்டவர்கள் மீது கந்து வட்டி வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close