ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்

ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்
ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உபுல் தரங்கா தலைமையிலான அணியில் மேத்யூஸ், நிரோஷா டிக்வெல்லா, குனதிலகா, மலிங்கா, கபுகேதரா, மிலிண்டா சிரிவர்தனா, மெண்டீஸ், தனஞ்ஜெயா, மலிண்டா புஷ்பகுமாரா, லக்ஸன் சண்டகன், ஹசரங்கா, சமீரா, விஷ்வ ஃபெர்னாண்டோ, திசாரா பெரேரா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், தாகூர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி, தம்புல்லாவில் வரும் 20 ஆம் தேதி இந்திய நேரப்படி 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com