இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உபுல் தரங்கா தலைமையிலான அணியில் மேத்யூஸ், நிரோஷா டிக்வெல்லா, குனதிலகா, மலிங்கா, கபுகேதரா, மிலிண்டா சிரிவர்தனா, மெண்டீஸ், தனஞ்ஜெயா, மலிண்டா புஷ்பகுமாரா, லக்ஸன் சண்டகன், ஹசரங்கா, சமீரா, விஷ்வ ஃபெர்னாண்டோ, திசாரா பெரேரா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், தாகூர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி, தம்புல்லாவில் வரும் 20 ஆம் தேதி இந்திய நேரப்படி 2.30 மணிக்கு தொடங்குகிறது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்