இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களை எடுத்தது.
குறைவான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் வீழ்த்தி அழுத்தம் கொடுக்க முயன்றது இந்தியா. அதன்படி முதல் ஓவரை இந்தியாவுக்காக ஷிகா பாண்டே வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை Alyssa Healy-வை க்ளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். அந்த பந்தை நல்ல லென்த்தில் அவர் வீசியிருந்தார்.
இந்நிலையில் அது குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் WV ராமன்.
“அந்த ஒரு டெலிவரியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அது மாதிரியான ஒரு டெலிவரியை நான் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அந்த பந்தை எதிர்த்து யாராலும் விளையாடியிருக்க முடியாது. அதுவும் அட்டாக்கிங் பேட்டாரான Alyssa Healy-வை அவுட் செய்துள்ளார். நல்ல இன்-ஸ்விங் அது” என தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்