[X] Close

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம்?

விளையாட்டு

Does-BCCI-makes-Change-in-the-Indian-squad-for-the-T20-World-Cup-2021

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரையில் ஓமன் மற்றும் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாட உள்ள அணி விவரத்தை வெளியிட்டிருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. 


Advertisement

image

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சிலர் நடப்பு ஐபிஎல் சீசனில் சொதப்பி இருந்தனர். அதே நேரத்தில் அணியில் இடம் பெறாத வீரர்கள் அதே ஐபிஎல்லில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் தான் இந்த மாற்றத்தை பிசிசிஐ மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 


Advertisement

அதற்காக கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் மற்றும் தேர்வு குழுவினர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் இருந்தால் அறிவிக்கப்படும். டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் அக்டோபர் 10 வரையில் அணியில் மாற்றம் செய்யலாம். இதற்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த மாற்றங்களை செய்துள்ளன. 

image

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபிட்னெஸ் கேள்விக்குறியாகி உள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement
[X] Close