மும்பையில் ஓடும் ரயிலில் நள்ளிரவில் 20 வயது பெண் ரயில் கொள்ளையர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ - மும்பை வரைசெல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது வெள்ளிக்கிழமை இரவு இகத்புரி மற்றும் கசாரா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மும்பை ஜிஆர்பி போலீஸ்கமிஷ்னர் “4 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” என அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
மேலும், சம்பவம் குறித்து, ‘’லக்னோ - மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் இகத்புரி ரயில் நிலையத்தில் நின்றபோது குற்றவாளிகள் ரயிலில் ஏறியிருக்கின்றனர். இவர்கள் டி -2 ஸ்லீப்பர் பெட்டியில் ஏறியபோது அங்கு 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கின்றனர். ரயில் கசாரா ரயில் நிலையத்தில் நின்றபோது பயணிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்ததன்பேரில் 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண் காவலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண் நலமுடன் உள்ளார்.
மதம் மாறி காதல்: கூலிப்படை மூலம் அர்பாஸை கொன்ற காதலியின் பெற்றோர் - கர்நாடகா காவல்துறை
முந்தைய ஆவணங்களை வைத்து விசாரித்ததில் குற்றவாளிகள் ஏற்கெனவே ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. அவர்கள் இதுவரை ரூ.96,390 மதிப்புள்ள மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை பயணிகளிடமிருந்து திருடியிருக்கின்றனர். அதில் ரூ. 34,200 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது குற்றவாளிகள்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 395, 397, 376(டி), 354 மற்றும் 354(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!