உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் சாஹா: ரவி சாஸ்திரி புகழாரம்

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் சாஹா: ரவி சாஸ்திரி புகழாரம்
உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் சாஹா: ரவி சாஸ்திரி புகழாரம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக ரித்திமான் சாஹா உருவெடுத்துள்ளார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி, “சாஹா தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனியை பின்பற்றி தற்போது உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக சாஹா உருவெடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும், “கிரிக்கெட்டில் சாஹா காட்டிய ஆர்வமும், சிறந்த பங்களிப்பும்தான் இந்த இடத்திற்கு அவரை முன்னேற வைத்துள்ளது. இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக சாஹாவின் பங்களிப்புதான் அவர் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக உருவெடுக்க காரணம்” என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.

முன்னதாக, விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் சாஹாதான் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com