Published : 09,Oct 2021 01:52 PM
உலகின் 2-வது பெரிய பணக்கார தனியார் நிறுவனமானது எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்'

உலகின் 2-வது பெரிய பணக்கார தனியார் நிறுவனமாக மாறியுள்ளது எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்'.
எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சார்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதில் பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புவதும் ஒன்று. இந்நிலையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவன பங்குகளின் மதிப்பு, 100 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. இதன் காரணமாக, எலான் மஸ்க்கின் வருமானம் 10.6 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, அவரின் மொத்த சொத்து மதிப்பு 222 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். உலகின் 2-வது பெரிய பணக்கார தனியார் நிறுவனமாக 'ஸ்பேஸ் எக்ஸ்' மாறியுள்ளது.