[X] Close

“20 தோற்றங்களில் நடித்தது புது அனுபவமாக இருந்தது” - பிரபுதேவாவின் 'பஹீரா' ட்ரெய்லர் ரிலீஸ்

சினிமா

Prabhu-Deva-Bagheera-Official-Trailer-released
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'பஹீரா' படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி, சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பஹீரா'. சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், 'பஹீரா' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் சில ஆபாச வார்த்தைகளுடன் கூடிய வசனங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. கலைப்புலி தாணு போன்ற திரையுலகப் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் பிரபுதேவா, பெண் வேடம் உட்பட 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் பஹிரா திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், அது தன்னுடைய திரை வாழ்க்கையில் புது அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டு பேசினார். 
 
 
 

Advertisement

Advertisement
[X] Close