Published : 08,Oct 2021 06:08 PM

ஆப்கானில் குண்டுவெடிப்பு: 100 பேர் உயிரிழப்பு?

Afghanistans-Kunduz-Mosque-Blast

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள குந்தூஸ் மாகாணத்தின் மசூதியில் இன்று வெள்ளிகிழமை தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். இந்த தொழுகையின்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியைப் பிடித்த பிறகு நிகழ்த்தப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்