[X] Close

சி.எஸ்.கே-வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறுமா ஆர்.சி.பி! - ஓர் அலசல்

சிறப்புக் களம்

Royal-Challengers-Bangalore-will-overtake-Chennai-Super-Kings-to-move-up-to-the-second-place-in-the-Points-table-of-IPL-2021

நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு நுழைந்தது விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். “ஈ சாலா கப் நம்தே” என ஒவ்வொரு முறையும் ஏக்கத்துடன் சொல்லி சொல்லி இறுதியில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்த நிலையில், உண்மையிலே அந்த வார்த்தைக்கு தகுந்த வகையில் அந்த அணியின் ஆட்டம் இந்த சீசனில் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் பெங்களூர் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 

image

டெல்லி - சென்னை - பெங்களூர்!


Advertisement

டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளை பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 13 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் பெங்களூர் அணி இரண்டாவது இடத்திற்கு குறி வைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட் வித்தியாசம் சென்னையை முந்த முட்டுக்கட்டையாக அமைந்ததுள்ளது. சென்னை +0.455, பெங்களூர் -0.159 என்ற நிலையில் உள்ளது. 

image

பெங்களூர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுமா?

ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான புள்ளிப்பட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. அதாவது முதல் பிளே-ஆப் போட்டியில் தோற்கும் அணி இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் விளையாடலாம். அதுவே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் விளையாடும். அதனால் தான் இப்போது இரண்டாவது இடத்தை சீல் செய்ய பெங்களூர் முயல்கிறது. 

இரண்டாவது இடத்திற்கு முன்னேற பெங்களூர் அணி இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து சுமார் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். பின்னர் டெல்லியை 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணியால் இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியும். ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் பெற்ற தோல்வி அந்த அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட தவிடுபொடியாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

image

இருந்தாலும் கோலி, படிக்கல், பரத், மேக்ஸ்வெல் என பெங்களூர் அணியின் டாப் நான்கு பேட்ஸ்மேன்களின் அமர்க்களமான பார்ம் அந்த அணியை இரண்டாவது இடத்திற்கு முன்னேற உதவலாம். அதற்கு முதலில் அந்த அணி டாஸ் வென்று, பேட் செய்ய வேண்டும். எப்படி இருந்தாலும் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளதே பெரிய கிப்ட் தான். முதல் இரண்டு இடத்தை பிடிக்க முடிந்த நிச்சயம் அவர்களுக்கு டபுள் டிரீட் என்பதில் சந்தேகவில்லை.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close