Published : 16,Aug 2017 06:14 AM
தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விநாடிக்கு 7,769 கன அடியில் இருந்து 10,535 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 45.71 அடியாக உள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 15.21 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் 2-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.