Published : 08,Oct 2021 09:21 AM

தெலங்கானா பாரம்பரிய நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai-Soundararajan-Governor-of-Telangana-performed-a-traditional-dance-at-the-Padukkamma-festival-in-Telangana-
தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா விழாவில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாரம்பரிய நடனமாடினார்.
 
தெலங்கானாவில் பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவான பதுக்கம்மா ராஜ்பவனில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. மகாளய அமாவாசை நாளில் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவார்கள். திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று பெண் ஊழியர்களுடன் இணைந்து ஆளுநர் தமிழிசை பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்