Published : 08,Oct 2021 08:12 AM
அக். 15 முதல் வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அக்டோபர் 15-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி:இந்திய வெளியுறவுத் துறை செயலர் அக்டோபரில் இலங்கை பயணம்?
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சுற்றுலா விசா வழங்குமாறு, பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிசினஸ் விமானம் "Chartered flights" மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசாவும், மற்ற விமானங்களில் வரும் வெளிநாட்டினருக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் விசா வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.