சிறந்த வீரர் விருது: மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் பரிந்துரை

சிறந்த வீரர் விருது: மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் பரிந்துரை
சிறந்த வீரர் விருது: மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் பரிந்துரை

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதுக்கு ரொனால்டோ, மெஸ்ஸி, கியன்லூகி பஃபன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலை 80 பயிற்சியாளர்கள் மற்றும் 55 பத்திரிகையாளர்கள் கொண்ட குழு பரிந்துரைத்தது. இந்தப் பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி, கியன்லூகி பஃபன் உட்பட 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ரியல் மேட்ரிட் அணி பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார் ரொனால்டோ. அந்தத்தொடரில் 12 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்தார். மேலும் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியிலும் பார்சிலோனா அணி வெல்வதற்கு மெஸ்ஸியின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இதேபோல் லா லீகா தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 37 கோல்கள் அடித்த மெஸ்ஸி முதலிடம் பிடித்தார். இதையடுத்து இத்தாலி லீக் போட்டியில் ஜூவாண்டஸ் அணி தொடர்ந்து ஆறாவது முறையாக பட்டம் வெல்வதற்கு கியன்லூகி பஃபனின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

இதில் சிறந்த வீரருக்கான விருது யாருக்கு என்பது வரும் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com