சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மலிக், கிரிக்கெட் உலகின் புதிய சென்ஷேஷனாக அவதானித்துள்ளார். 21 வயதான அவர் நடப்பி ஐபிஎல் சீசனில் விளையாடியாதோ இரண்டே ஆட்டங்கள் தான். அதில் சராசரியாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்தை வீசி அசத்தினார். அவர் குறித்து கோலி கூட தனது கருத்தை சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது தந்தை அப்துல் மலிக், தனது மகனின் வெற்றிக் கதையை பகிர்ந்துள்ளார்.
“மூன்று வயது முதல் உம்ரான் கிரக்கெட் விளையாடி வருகிறான். தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது அவனுடைய பெருங்கனவு. SRH அணிக்காக கடந்த ஞாயிறு அன்று அவன் ஆடும் லெவனில் இடம் பிடித்ததை எங்களால் மறக்க முடியாது. எங்கள் குடும்பமே டிவி பெட்டிக்கு முன்னாள் அமர்ந்திருந்தோம். நானும், எனது மனைவியும் அவன் விளையாடியாதை பார்த்து ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினோம். கடினமாக களத்தில் உழைத்துள்ளான் என் மகன். நாங்கள் அவனுக்கு எப்போதுமே ஆதரவாக தான் இருந்துள்ளோம். நிச்சயம் இந்திய அணிக்காக அவன் விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது குடும்பம் வறிய பின்னணியை கொண்டது.
இது ஏதோ ஒரு சாதாரண சாதனை அல்ல. காய்கறி விற்கும் என்னை எனது மகன் பெருமையடைய செய்துள்ளான். எங்களது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. துணைநிலை ஆளுநர் கூட அவன் விளையாடுவதை பார்த்து வாழ்த்தி இருந்தார். அவனது விளையாட்டு கெரியரில் சாதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி