Published : 07,Oct 2021 07:53 AM

குஜராத்தில் 2,988 கிலோ ஹெராயின் சிக்கிய விவகாரம்; வழக்கை விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ

NIA-has-taken-up-the-case-of-3000-kg-of-heroin-seized-at-a-Gujarat-port
குஜராத் துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்ட விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து சுண்ணாம்புக்கல் எனக்கூறி ஹெராயின் பொட்டலங்கள் கொண்ட சரக்கு பெட்டகங்கள் ஈரான் நாட்டு வழியாக குஜராத்தின் முந்திரா துறைமுகத்திற்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது. அதில் 2,988 கிலோ ஹெராயின் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொழிலதிபர் கவுதம் அதானி நிர்வகித்து வரும் துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்