[X] Close

நீட் தேர்வில் விலக்கு பெற தீவிர முயற்சி: டெல்லி சென்றார் விஜயபாஸ்கர்

Vijayabaskar-visits-delhi-to-get-neet-exemption

நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு இயற்றிய அவசர சட்ட மசோதாவை‌, நேற்று முன் தினம் சுகாதா‌ரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இந்திய மருத்துவக் கவுன்சிலிங் விதிப்படி, எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான‌ கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார். இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் மருத்துவக் கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close