Published : 04,Jan 2017 04:40 AM

திமுகவின் செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்

mk-stalin-got-new-post-in-dmk-general-council

திமுக-வின் பொதுக் குழு கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொதுக்குழுவில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் முதல் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தில் திமுக-வின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார். திமுக-வின் விதி 18-ல் திருத்தம் செய்யப்பட்டு புதிதாக திமுக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி திமுக தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் திமுக செயல்தலைவருக்கும் உண்டு. அதேசமயம் திமுக பொருளாளர் பதவியிலும் மு.க.ஸ்டாலின் நீடிக்கிறார். இதனிடையே, திமுக செயல் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து குவிந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்