“வேளாண்துறை கள அதிகாரி பேசுகிறேன்..” - விவசாயி வங்கி கணக்கிலிருந்து ரூ.2.97 லட்சம் கொள்ளை

“வேளாண்துறை கள அதிகாரி பேசுகிறேன்..” - விவசாயி வங்கி கணக்கிலிருந்து ரூ.2.97 லட்சம் கொள்ளை
“வேளாண்துறை கள அதிகாரி பேசுகிறேன்..” - விவசாயி வங்கி கணக்கிலிருந்து ரூ.2.97 லட்சம் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே விவசாயி ஒருவரிடம் வேளாண்துறை அதிகாரி பேசுவதாக கூறி வங்கி கணக்கு மற்றும் ஓடிபி எண்னை பெற்று 2.97 லட்சம் ரூபாய் நூதன மோசடி செய்யப்பட்டிருந்திருக்கிறது. வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறி கொடுத்த விவசாயி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அறியானிப்பட்டி பகுதியைச் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர் கந்தர்வகோட்டை புது நகரில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வங்கி கணக்கு வைத்து வரவு செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாயி ராஜேந்திரனிடம் யாரோ ஒரு மர்ம நபர் தான் வேளாண்துறை கள அதிகாரி பேசுவதாகவும் வங்கி கணக்கை புதுப்பிக்க வங்கி எண் மற்றும் ஓடிபி எண் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனை கேட்டு ராஜேந்திரன் தகவல்களை அளித்துள்ளார். அதன் மூலம் அவர் வங்கி கணக்கில் இருந்து 2,97,000 ரூபாயை அந்நபர் கொள்ளை அடித்துள்ளார்.

பின்னர், வங்கியிலிருந்து பணம் பறி போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்த வழக்கு விசாரணையை முடுக்கியுள்ள காவல்துறையினர், வங்கி கணக்கு மற்றும் ஓடிபி எண்ணை யார் கேட்டாலும் சொல்ல கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் மக்கள் தங்களின் அறியாமை காரணமாக இதுபோன்று தொடர்ந்து நூதன கொள்ளை நடைபெறுகிறது என்றும், இந்த நூதன கொள்ளையை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com