[X] Close

பட்டியலின பெண்கள் தொகுதியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணித்த பிற சமூகத்தினர்

வீடியோ ஸ்டோரி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி ஊராட்சியில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தத்தை சேர்ந்த பெண்களுக்கென தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருந்தது. இப்பகுதியில் 2,045 வாக்குகள் உள்ள நிலையில், அதில் இருவர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்த பெண்களாவர். இதை முன்வைத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சமூகத்தினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு பட்டியலினத்தை சேர்ந்த அந்தப் பெண் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கு வாக்களிக்க யாரும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி: ராணிப்பேட்டை: வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே திமுக அதிமுக பிரமுகர்கள் கடும் வாக்குவாதம் (117950) 


Advertisement

image

ஏற்கெனவே இத்தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்முடிவில் 12 வாரத்தில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென்றும், அடுத்த 6 மாதத்தில் இங்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்லியது. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் அம்முண்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடியில் மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. வாக்களிக்க வந்த அரசு பிற அதிகாரிகள், ஊழியர்களையும் ஊர்மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால் வாக்குச்சாவடிகள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close