திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வந்திருந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த சில நபர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பேஸ்ட் வடிவத்தில் 555.00 கிராம் எடையுள்ள தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 26.29 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடமிருந்து 697.500 கிராம் எடையுள்ள ரூ. 33.04 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பயணிகளிடம் இருந்து 59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கும்பகோணத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் கண்ணன்  இருவரையும் கைது செய்த திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com