[X] Close

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ராகுல், தவான் முன்னேற்றம்

Rahul-and-Dhawan-make-progress-in-Test-rankings

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ராகுல், தவான் முன்னேற்றம். 

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் ராகுல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 11-வது இடத்தில் இருந்து தற்போது 761 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல் 38-வது இடத்தில் இருந்த ஷிகர் தவான் 10 இடங்கள் முன்னேறி 612 புள்ளிகளுடன் 28-வது இடத்தை பிடித்துள்ளார். புஜாரா நான்காவது இடத்திலும், கோலி ஐந்தாவது இடத்திலும், அதிரடியாக விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்த ஹர்திக் பாண்டியா 45ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து அணிக் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.  


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close