மதுரையில் சிறுமியை காதலித்து கர்ப்பிணியாக்கி கருக்கலைப்பு செய்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர், நண்பர் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம் நேருநகர் பகுதியைச் சேர்ந்த பூபதிராஜா (26) என்பவர் தனது தங்கையின் தோழியான 15 வயது சிறுமி, பூபதி ராஜாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்ப்பமான சிறுமி பூபதி ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பூபதிராஜா, தங்கையின் திருமணம் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி , சிறுமியை தனியார் மருத்துவனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்துள்ளார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்ள பூபதிராஜா மறுத்துள்ளார். இதனால், பூபதி ராஜாவின் பெற்றோரிடம் சிறுமி முறையிட்டுள்ளார். திருமணம் செய்துவைக்க முடியாது என அவர்கள் சிறமியை மிரட்டியுள்ளனர் . இதற்கு , பூபதி ராஜாவின் நண்பர் சௌந்தர பாண்டியனும் உடந்தையாக இருந்துள்ளார் .
இந்நி;லையில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார் . அதன்பேரில் பூபதிராஜா, அவரது தந்தை துரை, தாய் சுசீலா மற்றும் நண்பர் சௌந்தர பாண்டியன் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்