[X] Close

எனக்கு எப்போதோ திருமணம் ஆகி விட்டது: உருகும் சமந்தா 

I-ve-been-married-forever--melting-Samantha

எனக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் எப்போதோ திருமணம் ஆகி விட்டது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட அவர்களது திருமணம் அக்டோபர் 6-7ம் தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனது திருமணம் குறித்து பேசிய சமந்தா, 

"நான், நாகசைதன்யாவை முதன் முதலில் "ஏமாயசேசவே" படத்தில் நடித்தபோதுதான் முதல்முறையாக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது. இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் என் குணம் மாறாது. திருமணமாகி நான் போக இருக்கும் குடும்பத்தினர், நான் நானாக இருக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது" எனக் கூறுகிறார். 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close