[X] Close

நாட்டை துண்டாட நினைக்கும் சக்திக்கு எதிராக குரல் கொடுங்கள் - சோனியா காந்தி வலியுறுத்தல்

Vote-against-the-power-to-feel-the-country---Sonia-Gandhi-urges

பிரிவினைவாதம், பயங்கரவாதம் கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். 


Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில், 

"பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் நாட்டை துண்டாட நினைக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக அனைத்து இந்தியர்களும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையிலும் வளர்ச்சி பாதையிலும் செல்ல வேண்டி கொள்கிறேன். இந்த சுதந்திர நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நல்ல உடல் நலம் மற்றும் வளர்ச்சியில் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார். 


Advertisement

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி தேசிய கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில், ராகுல் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 


Advertisement

Advertisement
[X] Close