[X] Close

வெளியானது ஆண்ட்ராய்ட் 12! சிறப்பம்சங்கள் என்ன?

டெக்னாலஜி

Android-12-launched-by-google-and-here-is-the-specification-of-OS

உலகளவில் ஸ்மார்ட் போன்களை இயக்கும் பிரதானமான இயங்குதளங்களில் (OS) ஒன்று ஆண்ட்ராய்ட். டிஜிட்டல் உலகின் சாம்ராட்டான கூகுள் இதனை டெவலப் செய்து வெளியிட்டுள்ளது. இந்த புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் பயனர்கள் புதுவிதமான டிசைனில் கூகுள் வொர்க்ஸ்பேஸ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் பீட்டா வெர்ஷனாக இது அறிமுகமாகி இருந்தது. மொத்தம் ஐந்து பீட்டா வெர்ஷன்களை வெள்ளோட்டம் பார்த்த கூகுள் இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது. 

image

மெட்டீரியல் டிசைன் லாங்குவேஜ் மூலம் பெரிய அளவிலான பட்டன்கள், அதில் அனிமேஷன் கொஞ்சம் தூக்கலாகவும், புதிய ஸ்டைலில் ஹோம் ஸ்க்ரீன் விட்ஜெட்டும் கொண்டுள்ளது ஆண்ட்ராய்ட் 12. Monet என்ற அம்சத்தின் மூலம் பயனர்கள் வைத்துள்ள வால்பேப்பர்களை அடிப்படையாக கொண்டு அதன் கலருக்கு தகுந்தது போல தானியங்கு முறையில் தீம்கள் மற்றும் சிஸ்டம் மெனுக்களுக்கு வண்ணம் கொடுத்துக் கொள்ளுமாம் இந்த இயங்குதளம். 


Advertisement

image

எந்தெந்த போன்களில் இதை பயன்படுத்தலாம்?

கூகுள் பிக்ஸல் போன் பயனர்கள் இந்த ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளத்திற்கு தங்கள் போனை அப்டேட் செய்து கொள்ளலாம். அதே போல நோக்கியா, ஒன்பிளஸ், சாம்சங், சியோமி, ஒப்போ, விவோ மாதிரியான நிறுவனங்களின் குறிப்பிட்ட சில மாடல் போன்களை பயன்படுத்தும் பயனர்கள் இந்த இயங்குதளத்திற்கு தங்களது போன்களை அப்டேட் செய்து கொள்ளலாம். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close