நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸை இழந்த சென்னை அணி இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தது.
முதல் ஓவரில் 16 ரன்களை எடுத்தது சென்னை. ருதுராஜ் மற்றும் டூப்ளசிஸ் வழக்கம் போல நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது ஓவரில் டூப்ளசிஸ் வெளியேறினார். தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 13 ரன்களில் நோர்க்யா வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
மொயின் அலி 5 ரன்களிலும், உத்தப்பா 19 ரன்களிலும் வெளியேறினர். பத்து ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்களை எடுத்திருந்தது சென்னை.
கேப்டன் தோனியும், ராயுடுவும் இன்னிங்ஸை இறுதி வரை எடுத்துச் செல்லும் நோக்கில் விளையாடினர். இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தோனி 27 பந்துகளில் 18 ரன்களை சேர்த்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெளியேறினார். ராயுடு 40 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது. டெல்லி அணிக்காக அக்சர் பட்டேல், அஸ்வின் மற்றும் நோர்க்யா விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்