Published : 04,Oct 2021 12:55 PM
உள்ளாட்சி தேர்தல்: விஜய் புகைப்படத்துடன் பிரசாரம் செய்யும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள்

விஜய் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக நபர்கள் போட்டியிடுகின்றனர் என கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்

இந்த நிலையில், முடிச்சூர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அந்த இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தர்கா உள்ளிட்ட மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் புகைப்படம் பதிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் விஜய் மன்றத்தை சேர்ந்தவர்கள் வெற்றியடைவோம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.