[X] Close

'112 வயது' : உலகின் மிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் முதியவர்

உலகம்

112-yr-old-from-Spain-becomes-world-oldest-living-man-has-22-great-grandchildren
112 வயதை கடந்த முதியவர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
 
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919 அன்று பிறந்துள்ளார். இவருக்கு 7 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ஆனால், குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே தனது மனைவி இறந்து விட்டதாக முதியவர் கூறியுள்ளார்.
image
 
தற்போது தனது ஒரு மகள் மற்றும் மகன்தான் பராமரித்து வருவதாகவும், தனக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளதாகவும் சாசாதுர்னினோ தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த 18 மாதங்கள் தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டதாகவும், தற்பொழுது 112 வயது நிறைவடைந்து உள்ளதை அனைவரும் கொண்டாடியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close