[X] Close

உ.பி. வன்முறை - பத்திரிகையாளர் உயிரிழப்பு

இந்தியா

violence-during-farmers-protest-in-UP---s-Lakhimpur-Kheri

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டம் பன்வீர்பூர் கிராமத்தில் நேற்று நிகழ்ந்த வன்முறையில் ஏற்கெனவே 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

image


Advertisement

இதனிடையே பன்வீர்பூர் கிராமத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close