[X] Close

ஹைதராபாத் அணியை 115 ரன்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா!

விளையாட்டு

KKR-controlled-SRH-for-just-115-Runs-in-Match-number-49-of-the-IPL-2021

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 


Advertisement

image

சாஹா மற்றும் ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சாஹா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 


Advertisement

ஜேசன் ராய் நான்காவது ஓவரில் அவுட்டானார். பவர் பிளே ஓவர்களில் ஹைதராபாத் அணி 35 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான் என பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 

கொல்கத்தா அணிக்காக சவுதி (2), ஷிவம் மாவி (2), வருண் சக்கரவர்த்தி (2), ஷகிப் அல் ஹசன் (1) மாதிரியான பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்தது. 116 எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை கொல்கத்தா விரட்டி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close