Published : 15,Aug 2017 10:16 AM

முதல்வரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?: கமல்ஹாசன் 

Kamal-Hassan---Why-do-not-you-emphasize-the-resignation-of-the-Chief-Minister

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது முதல்வரை  நேரடியாக விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

"ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால் மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?." என்று கேட்டுள்ளார். 

"தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு. எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டை மேம்படுத்த கருவியாக உதவ வேண்டும். அந்த கருவிகள் சரியாக செயல்படவில்லை என்றால், மாற்று கருவியை தேடவேண்டும்" 

"நாம் ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில், இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவு உள்ளவர் வாருங்கள்.... வெல்வோம்" எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்