Published : 15,Aug 2017 10:06 AM

பிரதமர் மோடி உரையாற்றிய மேடை அருகே வந்து விழுந்த கருப்பு காற்றாடி

-Prime-Minister-Modi-addresses-the-stage-and-the-fallen-black-windstorm-comes-near

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது, கருப்பு நிற காற்றாடி ஒன்று அங்கு விழுந்தது.

சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செங்கோட்டை மற்றும் பல இடங்களில் 9ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கான துணை ராணுவ வீரர்களும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் தனது பேச்சை முடிக்கும் நேரத்தில் கருப்பு நிறத்திலான பட்டம் ஒன்று, மேடை அருகே காற்றில் பறந்து வந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அவரது பேச்சுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றாலும், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து யாராவது கருப்பு நிற காற்றாடியை விட்டார்களா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்