Published : 03,Oct 2021 04:16 PM
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு தோனியிடம் ஆட்டோகிராப் பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது இளம் இடது கை பேட்ஸ்மேனான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம்.
19 பந்தகளில் அரை சதம் விளாசி இருந்தார் அவர். அந்த அமர்களாமன ஆட்டம் ராஜஸ்தான் அணி 190 என்ற இலக்கை 20 ஓவர்களில் 15 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் கடக்க உதவியது.
ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்து பேசிய ஜெய்ஸ்வால், தனது பேட் மற்றும் ஜெர்சியில் தோனியின் ஆட்டோகிராப்பை பெற்றுள்ளார். இந்த படங்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. யாஷஸ்வி தோனியின் தீவிர ரசிகராவார். கடந்த சீசனில் தோனியை நேரில் பார்த்ததும் இரு கரம் கூப்பி வணக்கம் வைத்திருந்தார் யாஷஸ்வி.