மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப்பெற்றுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில் 6 மாதத்திற்குள் பேரவை உறுப்பினராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இந்நிலையில் தான் பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணாமூல் உறுப்பினர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது வெற்றிப்பெற்று அம்மாநில முதல்வராக தொடர்கிறார்.
தொடர்புடைய செய்தி: “பவானிப்பூரில் வெற்றபெற வைத்த மக்களுக்கு நன்றி; நந்திகிராமில் நான் தோற்றது சதி” - மம்தா
மம்தாவின் வெற்றிக்கு தனது சமூக வலைதள பக்கம் வழியாக வாழ்த்து கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தனது பதிவில் அவர் “பவானிபூர் இடைத்தேர்தலில் உங்களின் அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள் மம்தா. மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனக்கூறியுள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்