[X] Close

கொரோனா அதிகமாக இருந்த இடங்களில் நோய்த்தாக்கம் குறைய தொடங்குவதற்கான அறிகுறி - ராதாகிருஷ்ணன்

கொரோனா வைரஸ்

Radhakrishnan-said-there-were-signs-of-a-decline-in-the-incidence-of-the-disease-including-in-the-western-districts-where-corona-was-high
கொரோனா அதிகமாக இருந்த மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தாக்கம் குறையத் தொடங்குவதற்கான அறிகுறி தென்படுவதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 4வது ஞாயிற்றுக் கிழமையாக இன்று மெகா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 760 மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 1,600 மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி போடும் முகாமை மருத்துவத்துறை செயலர் ராதகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
 
image
பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் நேற்று வரை 4 கோடியே 79 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தற்போது 31 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தொற்று அதிகமாக இருந்த மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களிலும் படிப்படியாக நோயின் தாக்கம் குறைய தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தார். கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் எனத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், பணி செய்யும் இடங்கள், நிகழ்ச்சிகள், மருத்துவமனைக்கு போய் வரும் பார்வையாளர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
 

Advertisement

Advertisement
[X] Close