மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய பணியாற்றுவோம்: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய பணியாற்றுவோம்: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய பணியாற்றுவோம்: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய சிறப்பாக பணி செய்வோம் என உறுதியேற்போம் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் சி.ஐ.எஸ்.எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தனி மனிதனுக்கான உரிமை, உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை பாதுகாப்பது நீதித்துறையின் முக்கிய கடமை. நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய சிறப்பாக பணி செய்வோம் என உறுதியேற்போம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com