Published : 02,Oct 2021 05:20 PM

மும்பையை 129 ரன்களில் சுருட்டியது டெல்லி அணி! ஆவேஷ் -அக்சர் பட்டேல் அசத்தல் பந்து வீச்சு

DC-controlled-MI-for-129-runs-in-IPL-2021-match-number-46

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த மும்பை அணி முதலில் பேட் செய்தது. 

image

அந்த அணிக்காக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் டிகாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் வெறும் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட்டானார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். 

டிகாக் 19 ரன்களில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 33 ரன்களை குவித்து அவுட்டானார். தொடர்ந்து சவுரப் திவாரி மற்றும் பொல்லார்ட் என இருவரும் அவுட்டாகினர். 14.1 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி. 

image

பின்னர் பாண்ட்யா சகோதரர்கள் இன்னிங்ஸை இறுதி பந்து வரை நகர்த்தி செல்லும் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். இருந்தாலும் 19-வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா, 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். குல்டர் நைல் ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.  

டெல்லி அணிக்காக அக்சர் பட்டேல் (3), ஆவேஷ் கான் (3), அஷ்வின் (1) மற்றும் நார்க்கியா (1) விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்தது மும்பை. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டி வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்