[X] Close

டெல்லியை வீழத்துமா மும்பை? எப்படி இருக்கும் இன்றைய அணிகள்?

விளையாட்டு

Mumbai-Vs-Delhi-probable-11-for-today-match-in-IPL

ஷார்ஜாவில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ரோகித் தலைமையிலான மும்பை அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை 16 முறையும், டெல்லி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பிளே ஆஃப் பந்தயத்தில் தொடர்ந்து பயணிக்க இன்றைய போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக பார்க்கப்படும் இன்றையப் போட்டியில் இரு அணிகளும் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் - உத்தேச அணி


Advertisement

குவிண்டன் டி காக்
ரோகித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
செளரப் திவாரி
பொல்லார்ட்
ஹர்திக் பாண்ட்யா
குர்ணால் பாண்ட்யா
நாதன் கூல்டர் நைல்
பும்ரா
ராகுல் சஹார்
ட்ரெண்ட் பவுல்ட்

image

டெல்லி கேப்பிடல்ஸ் - உத்தேச அணி


Advertisement

ஷிகர் தவான்
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பன்ட்
ஹெட்மயர்
லலித் யாதவ்
அஸ்வின்
அக்சர் படேல்
ரபாடா
அன்ரிச் நார்ஜே
ஆவேஷ் கான்


Advertisement

Advertisement
[X] Close