
ட்விட்டர் வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் கத்தி மற்றும் தெறி படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ரசிகர்களுடன் சில நேரம் ட்விட்டர் வலைதளத்தில் செலவழித்துள்ளார். அப்போது ரசிகர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்தது தலயா? இல்ல தளபதியா? என்று கேட்டதற்கு ‘தலதளபதி’ என்று பதிலளித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதேபோல் தெறி, கத்தி படத்திற்கு பிறகு மெர்சலில் ஏன் விஜய் உடன் சேர்ந்து வேலை செய்யவில்லை என்று கேட்டதற்கு, நிறைய படங்களில் வேலை செய்து கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளார். மேலும் தளபதி 62 படத்தில் வேலை செய்கிறீர்களா என்று கேட்டதற்கு அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அது படத்தின் இயக்குநர் முடிவு செய்ய வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.
எப்போது அஜித்துடன் வேலை செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, அஜித்துடன் இணைந்து வேலை செய்ய விரும்புவதாகவும், நேரம் அமையும்போது நிச்சயம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அசிஸ்டென்ட்டாக எனது முதல் படம் பில்லாதான் என்றும் கூறியுள்ளார்.