கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,17,010 கோடி வசூலாகியுள்ளது, இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.20,578 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.26,767 கோடியும் ஐஜிஎஸ்டி ஆக ரூ.60,911 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.29,555 கோடி உட்பட) மற்றும் செஸ் வரியாக ரூ.8,754 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.623 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட கூடுதல் தகவல்கள்…
ஐஜிஎஸ்டி-யிலிருந்து வழக்கமான பட்டுவாடாவாக மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.28,812 கோடியும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.24,140 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான பட்டுவாடாக்களுக்குப் பிறகு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மொத்த வருவாய், செப்டம்பர் 2021ல் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.49,390 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.50,907 கோடியும் கிடைத்துள்ளது.
2021 செப்டம்பர் மாத வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட 23% அதிகமாகும். கடந்தாண்டு இதே மாதத்தில் கிடைத்ததை விட, இந்த மாதத்தில் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 30% அதிகம் மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாய் (சேவை இறக்குமதி உட்பட) 20% அதிகமாகும். செப்டம்பர் 2019 இல் ரூ.91,916 கோடி வருவாய் கிடைத்த நிலையில் 2020 செப்டம்பரிலேயே அதைவிட 4% அதிக வருவாய் கிடைத்தது.
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் சராசரி ரூ.1.15 லட்சம் கோடி, இது ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்த மாதாந்திர வசூலான ரூ.1.10 லட்சம் கோடியை விட 5% அதிகமாகும்.
இது நாட்டின் பொருளாதாரம் வேகமாக எழுச்சி பெற்று வருவதை தெளிவாக உணர்த்துகிறது. பொருளாதார வளர்ச்சியுடன், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், குறிப்பாக போலி ரசீது தயாரிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. வருவாய்க்கான இந்த சாதகமான போக்கு தொடர்வதுடன் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யும்.
மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான இழப்பீடாக ரூ.22 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பர் 2020-ல் 6,454 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021 செப்டம்பரில் 21% அதிகரித்து 7,842 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!