இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ!

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ!
இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ!

இந்திய சந்தையில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ. அறிமுக விலையாக சலுகைகளையும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம். இந்த போன் கடந்த ஜூலை மாதம் ஐரோப்பாவில் அறிமுகமாகி இருந்தது. ஒன்பிளஸ், சாம்சங், ஜியோமி மாதிரியான நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த போன் அறிமுகமாகி உள்ளது. 

சிறப்பம்சங்கள்!

இரண்டு வண்ணங்களில் வெளியாகி உள்ள இந்த போன் டியூயல் நானோ சிம், ஆண்ட்ராய்ட் 11, 6.7 இன்ச் ஃபுள் HD டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC, 8 ஜிபி ரேம், ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 4,500mAh பேட்டரி, 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 30 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மாதிரியானவை இதில் உள்ளன. 

இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த போனுக்கான முன்பதிவு வரும் 3-ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com