Published : 01,Oct 2021 12:46 PM

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

Popular-Kannada-iconic-actress-Soujanya-has-committed-suicide-by-hanging-herself-shocking-fans
பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
குடகு மாவட்டத்தில் குஷால் நகரைச் சேர்ந்த சௌஜன்யா, பெங்களூருவில் வசித்து வந்தார். 25 வயதான சௌஜன்யா, நெடுந்தொடர்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர். சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் இவர் வசித்த வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினரை வரவழைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
 
image
அங்கு சௌஜன்யாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அதில், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள சௌஜன்யா, தனது இயற்பெயரான சவி மாதப்பா என்ற பெயரில் கையொப்பமிட்டுள்ளார். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார். தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்