[X] Close

பால்கனியிலிருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் குழந்தைகள் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு

Children-fall-from-the-balcony-and-death-increase-warning-to-the-parents

சென்னை மண்ணடியில் 3 ஆவது மாடி பால்கனியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சோகம், தொடர்கதையாகும் பால்கனி உயிரிழப்புகளால் அச்சம். சென்னையில் மாடி பால்கனியில் இருந்து குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.


Advertisement

இதுபற்றிய விவரங்கள்…

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மாம்பலத்தில், கண்ணன்- மகேஸ்வரி தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் முத்துராஜ் 2-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்தது.


Advertisement

2018 ஆகஸ்ட் சூளையில் 3-வது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை அப்துல்லா தவறி விழுந்து உயிரிழந்தான்.

2018 ஆகஸ்ட் - சூளைமேடு சித்ரா அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில், நேபாள தம்பதியின் 4 வயது மகள் சாரதா 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாள்.

2019- ஆகஸ்ட்டில் கொண்டித்தோப்பு பகுதியில் வீட்டு பால்கனியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தாய் ஜெயஸ்ரீ உணவு ஊட்டிக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.


Advertisement

image

2019-டிசம்பரில் பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்ப தோட்டத்தில், 2 ஆவது மாடியில் ஒன்றரை வயது குழந்தை இர்பானுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தபோது தாயின் கையில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.

2021 ஜூலையில் சாஸ்திரி நகரில், ஒடிசாவைச் சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை ஹிமாசு பரிக், நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான்.

தற்போது, மண்ணடியில் 3 ஆவது மாடியில் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை ஆசியா, தவறி விழுந்து உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

image

பால்கனிகளில் குழந்தைகள் விளையாடும்போதும், குழந்தைகளை பால்கனியில் வைத்து வேடிக்கை காட்டும்போதும் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இதனைப்படிக்க...சென்னை: 3வது மாடியிலிருந்து தவறிவிழுந்த 18 மாத குழந்தை உயிரிழந்த சோகம் 


Advertisement

Advertisement
[X] Close