Published : 30,Sep 2021 01:13 PM

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

The-Chennai-Meteorological-Department-has-forecast-heavy-rains-in-17-districts-in-Tamil-Nadu-today
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
image
சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்