Published : 30,Sep 2021 12:50 PM
’மாநாடு’ டிரெய்லரை வெளியிடும் நான்கு மொழி திரை பிரபலங்கள்

டி.ஆர். சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் டிரெய்லரை 4 மொழிகளிலும் அந்த திரையுலகின் முன்னணி பிரபலங்கள் சனிக்கிழமை மதியம் 11:25 மணிக்கு வெளியிடுகின்றனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் டி.ஆர்.சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு, திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநாடு படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை மதியம் 11.25 மணிக்கு வெளியிடப்படுமென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மாநாடு திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர் முருகதாசும், மலையாளம் டிரெய்லரை நடிகர் நிவின் பாலியும் வெளியிடுகின்றனர். தெலுங்கில் நடிகர் நானியும் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்