கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க ஒப்புதல்

கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க ஒப்புதல்
கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க ஒப்புதல்
கூடங்குளத்திலேயே 3-வது, 4-வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 3-வது, 4-வது அணு உலைகளின் கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆணையத்தின் இம்முடிவுக்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com