தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அருகில் தீக்குளித்தவரை சாதுர்யமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய போலீசாரை நேரில் வரவழைத்து டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருக்கிறது. முதல்வர் இல்லம் இருப்பதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 27-ம்தேதி அடையாளம் தெரியாத நபரொருவர் அச்சாலை இறுதியிலிருந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்தபடி சித்தரஞ்சன் சாலையை நோக்கிபடி ஓடி வந்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்த அங்கிருந்த தண்ணீர் கேனை கொண்டு தீயை அணைத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீக்குளித்த நபரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க... தமிழகத்தில் 36 மணிநேரத்தில் 2,512 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திர பாபு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 40 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அந்நபர் யார் என்பது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ஜமீன்தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பது தெரியவந்தது. தமிழ்நாடு பறையர் பேரவைத் தலைவராக அவர் உள்ளார்.
ஜமீன்தேவர்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, மனுவை ஏற்றுக்கொள்ளக் கோரி தீக்குளித்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தீயில் எரிந்து கொண்டிருந்த வெற்றிமாறனை அங்கிருந்த போலீசார், குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் கேனை ஊற்றி தீயை அணைத்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி, தமிழக காவல்துறை தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மேலும், தீக்குளித்த வெற்றிமாறனை விரைந்து சென்று காப்பாற்றிய காவல் ஆய்வாளர் லலிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, காவலர்கள் கோபிநாத், ராஜசேகர், கார்த்திக் ஆகியோரை தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும், டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைவரையும் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்