உலகின் டாப் 3 வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறினார்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெளிநாட்டில் நடைபெற்ற தொடர் ஒன்றில் முதன்முறையாக அனைத்து போட்டிகளிலும் வென்று இந்திய அணி சாதித்தது.
இந்தப் போட்டியில் முகமது ஷமியின் பந்துவீச்சை கேப்டன் விராத் கோலி புகழ்ந்துள்ளார். அவர் கூறும்போது, ’உலகின் டாப் 3 வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர் என்பது என் கணிப்பு. ஏனென்றால் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடம் அபாரமாக இருக்கிறது. அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறுவது உண்மை. அவர் சாதாரணமாக பந்து வீசுவது அல்ல. அவர் எங்களின் மதிப்பு மிக்க பந்து வீச்சாளர். அவர் பந்துவீச்சை பார்ப்பதில் எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் ஃபீல்டில் இருந்து அதை ரசித்துக்கொண்டிருப்போம். அவர் ஸ்பெஷல் பவுலர்’ என்று புகழ்ந்தார்.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்